Advertisment

அடித்தட்டு மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றவர் பாலகிருஷ்ணன் - ஸ்டாலின் புகழாரம்

stalin

Advertisment

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 22வது தமிழ்நாடு மாநில மாநாடு 2018 பிப்ரவரி 17-20 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளான இன்று 80 பேர் கொண்ட மாநிலக்குழுவிற்கு 79 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒரு இடத்திற்கு பின்னர் தேர்வு செய்வது என மாநாடு முடிவு செய்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளராக தோழர் கே. பாலகிருஷ்ணன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தி:

’மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித்தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடி, அவர்கள் மத்தியிலும் அடித்தட்டு மக்கள் மத்தியிலும் நற்பெயர் பெற்றுள்ள பாலகிருஷ்ணன் , தன்னைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் பிரச்னை மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள பல்வேறு முக்கியமான பிரச்னைகள் குறித்து சட்டமன்றத்தில் மிக ஆழமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் வாதங்களை எடுத்து வைத்தவர் என்பதை நானறிவேன். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, பலமுறை சிறை சென்றுள்ள அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பதவியில் சீர்மிகு பணியாற்றி வெற்றிபெற வாழ்த்துகிறேன்.’’

Balakrishnan - Stalin's Honor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe