சிவகங்கையில் தி.மு.கவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளராக நிருத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதித் துறை அமைச்சர் பா. சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தார் அப்போது அவர் "கலைஞரின் இழப்போடு அவர் இன்றி நடக்கும் தேர்தலுக்கு அவரின் மகனான எனக்கு வாக்களித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் " என்று தொடங்கி "மானம் காத்த மருது சகோதரர்களின் மன்னான சிவகங்கை" என்று புகழாரம் சூட்டினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/stalin campaign.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
பா.ஜ.க-வின் சிவகங்கை வேட்பாளரான எச். ராஜாவைப் பற்றி பேசத் தொடங்கிய ஸ்டாலின் " உங்களுக்கு எல்லாம் தெரியும் எச். ராஜாவைப் பற்றி அவர் ஒரு அவர் ஒரு அயோக்கிய அரசியல்வாதி, அவருக்கு வாக்களித்தால் அவரால் பாராளுமன்றத்தில் உங்கள் சிவகங்கை தொகுதிக்கு தான் அசிங்கம்" என்றும் பா.ஜ.க-வின் சுப்பிரமணிய சாமி மோடியைப் பற்றி தவறாக பத்திரிக்கையாளர்கள் முன் பேசிய சிலவற்றையும் பிரச்சாரத்தின் போது கூறினார்.
அஹமத் அலி .
Follow Us