Advertisment

தவறான செய்தி... எடப்பாடி பழனிசாமி பதில்

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை நடத்தினார். தண்ணீர் பிரச்சினையை தீர்க்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

Advertisment

Edappadi Palanisamy

இதனைத் தொடர்ந்து அவர் செயிதியளார்களை சந்தித்த அவர்,

தேர்தல் வந்ததால் அரசு செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் நடத்தை விதிகள் முடிந்ததும் உடனடியாக கூட்டம் போட்டு, நிதி ஒதுக்கி குடிநீர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டோம். சென்னையில் நாள் ஒன்றுக்கு 9800 நடைகள், தண்ணீர் லாரிகள் மூலம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதை மேலும் அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நான்கு ஏரிகளும் வறண்டு விட்டன. ஆனாலும் சென்னை மக்களுக்கு தேவையான நீரை கொடுத்து வருகிறோம். 12 டிஎம்சி நீர் கிருஷ்ணா நதியில் இருந்து வர வேண்டும். ஆனால் 2 டிஎம்சி நீர் மட்டுமே கிடைத்தது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், நிலத்தடி நீர், குவாரிகளில் எடுக்கும் நீர் ஆகியவற்றை சேகரித்து தண்ணீர் வழங்கி வருகிறோம். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகளவில் டேங்கர் லாரிகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முன்வந்த கேரள முதல்வருக்கு வாழ்த்துக்கள். நாள் ஒன்றுக்கு 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்க கேரள அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கேரளா கொடுப்பதாக சொல்லும் தண்ணீர் நமக்கு போதுமானதாக இருக்காது. தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை கேரளா தந்தால் நன்றாக இருக்கும். இது குறித்து கேரள முதல்வருக்கு கடிதம் எழுத உள்ளேன்.

கேள்வி : அமைச்சர்களுக்கு மட்டும் கேட்டவுடன் இரண்டு லாரி தண்ணீர் கிடைக்கிறதே ?

பதில் : தவறான செய்தி. உங்களுக்கு எப்படி கிடைக்கிறதோ, அதே போல் எனக்கும், அமைச்சர்களுக்கும் கிடைக்கிறது. அமைச்சர்கள் வீடுகளுக்கு 2 லாரி தண்ணீர் வழங்கப்படுவதாக வெளியான செய்தி தவறானது.

கேள்வி : மெட்ரோ லாரியில் பதிவு செய்தால் 25 நாட்களுக்கு பின்னரே தண்ணீர் கிடைக்கிறது. தனியார் லாரிகள் அதிக பணம் வாங்குகிறார்களே?

பதில்: அடுக்கு மாடியில் இருப்போர் அனைவரும் தனித்தனியாக பதிவு செய்கிறார்கள். ஏழை மக்கள் என்ன செய்வார்கள்? கட்டண உயர்வு தொடர்பாக டேங்கர் உரிமையாளர்களிடம் பேசப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், அனைத்து பகுதிகளுக்கும் பிரித்து பிரித்தே அம்மா குடிநீர் பாட்டில்கள் அனுப்பப்படுகின்றன. அம்மா குடிநீரை மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். குடிநீர் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தரமற்ற, அதிக விலைக்கு தண்ணீரை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Edappadi Palanisamy Tamilnadu water
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe