தினம் ஒருவர் தற்கொலை செய்து கொள்வோம்: அய்யாக்கண்ணு

ayyakannu farmer

மோடியை கண்டித்து அங்கு தினம் ஒருவர் தற்கொலை செய்து கொள்வோம் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லியில் உணர்வுபூர்வமான போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 40 கி.மீ சுற்றளவு டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு 2 மடங்கு லாபம் தருவேன் என கூறி பிரதமர் மோடி வெற்றி பெற்றார். ஆனால் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறார்.

எனவே மோடியை கண்டித்து திருச்சியில் இருந்து 30 விவசாயிகள் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். இதற்காக திருச்சியில் மாநில செயற்குழு கூட்டம் நடை பெற உள்ளது. இதில் முடிவு எடுத்து டெல்லி செல்லும் விவசாயிகள், மோடியை கண்டித்து அங்கு தினம் ஒருவர் தற்கொலை செய்து கொள்வோம் என கூறினார்.

Ayyakannu delhi farmers protest
இதையும் படியுங்கள்
Subscribe