அயோத்தி தீர்ப்பை தமிழக காங்கிரஸ் கட்சி தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

அயோத்தி வழக்கினுடைய தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் தெளிவாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை நாம் மிக உயர்ந்த அமைப்பாக கருதுவது இந்திய அரசமைப்புச் சட்டமும், உச்சநீதிமன்றமும் தான். தற்போது உச்சநீதிமன்றம் நூறு ஆண்டுகால பிரச்சினைக்கு ஒரு தீர்வை கண்டிருக்கிறது. அந்த தீர்வை தமிழக காங்கிரஸ் கட்சி தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறது.

k s azhagiri congress

தேசியக் கொடிக்கு நாம் எவ்வாறு மரியாதை செலுத்துகிறோமோ, அதேபோல உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கும் மரியாதை செலுத்த வேண்டும். நாம் தோல்வி அடைந்திருக்கிறோம் என்று சிலரோ, நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று சிலரோ கருதுவதில் எந்த பலனும் இல்லை. உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு எல்லாவிதமான சாதக, பாதக அம்சங்களையும் மனதில் கொண்டு, வரலாற்று நிகழ்வுகளையும் மனதில் கொண்டு, தொல்லியல் துறையின் முடிவுகளையும் மனதில் கொண்டு, இன்றைய நாட்டு நடப்பினையும் மனதில் கொண்டு மிகத் தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

Advertisment

அவரவர்கள் வணங்கும் கடவுளின் பெயரால் இந்த தீர்ப்பை முழுமையாக ஏற்றுக் கொண்டு, மிகவும் மகிழ்ச்சியான ஒரு சமுதாயமாக இந்திய சமுதாயம் திகழ வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அனைவரையும் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.