Attempted robbery at Thuraimurugan luxury bungalow

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் உள்ளது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் பண்ணை வீடு. 25 ஏக்கரில் அமையப்பெற்ற அந்த வீட்டில், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருட முயற்சித்துள்ளனர். இரண்டு கதவுகளை உடைத்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். ஆனால் அங்கு நகை, பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Advertisment

அந்த இடத்தில் ஆள் நடமாட்டம் முற்றிலும் இல்லாததால் அங்கு மர்ம நபர்கள் கொள்ளைக்கு முயற்சி செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த ஏலகிரி போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களின் உதவியோடு கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். மேலும் அவரது வீட்டில் பிரேம் குமார் என்ற அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பராமரிப்பு பணிகளை செய்து வருகிறார், அவரையும் விசாரித்து வருகின்றனர். ஏலகிரியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.