அரசியல் சாசனத்தை அழிக்க முயற்சி; மோடி அரசு மீது ப.சிதம்பரம் அட்டாக்

Attempt to destroy the Constitution! P. Chidambaram  on Modi government!

இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி 75 கி.மீ. தூரம் நடை பயணத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி துவக்கியிருக்கிறது. மூன்று நாள் நடை பயணமாக துவங்கியுள்ள இந்தப் பயணம், ஸ்ரீபெரும்புதுார் ராஜீவ் நினைவிடத்தில் முடிகிறது. இதற்கான துவக்க விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ப.சிதம்பரம், ''அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்கு அம்பேத்கர் தலைமையில் 70 பேர் கொண்ட குழு இயங்கியது. அந்த 70 பேரில், மல்லாடி கிருஷ்ணசாமி, எம்.கோபால்சாமி என்கிற இரண்டு தமிழர்கள் இடம் பெற்றிருந்தனர். அது நமக்குப் பெருமை. இன்றைக்கு, அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு அழிக்கவும் சிதைக்கவும் நினைக்கிறது. அரசியல் சாசனம் அழிக்கப்பட முயற்சிப்பது ஆபத்தான போக்கு. அதனை தடுக்க நாடு முழுதும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்றார் மிக அழுத்தமாக.

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசும் போது, ''சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி நடத்தப்படுகிற இந்த நடைபயணத்தை வெற்றி அடையச் செய்ய வேண்டும்'' என்றார்.

இந்த விழாவில் மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்சித் உள்ளிட்ட காங்கிரசின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

congress
இதையும் படியுங்கள்
Subscribe