d1

பெரம்பலூரில் உள்ள பியூட்டி பார்லரில் புகுந்த ஒரு நபர், அங்கு உள்ள ஒரு பெண்ணை காலால் உதைக்கும் வீடியோ காட்சி வாட்ஸ் அப்புகளில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில் தாக்குதல் நடத்துவது திமுக நிர்வாகி என தெரிய வந்ததும், அவரை தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை அறிவித்துள்ளது.

Advertisment

பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் பிரபல தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்யா (வயது 35). இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த முன்னாள் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் (52) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது.

Advertisment

DMK Administrator Temporary Removal

செல்வக்குமார் சத்யா பியூட்டி பார்லர் நடத்தி வரும் பாரதிதாசன் நகரில் குடியிருந்துகொண்டு பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். செல்வக்குமார் - சத்யா இடையேயான கொடுக்கல் வாங்கல் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது.

இந்நிலையில் சத்யா பெரம்பலூர் தற்போதைய திமுக நகர செயலாளர் பிரபாகரன் என்பவருடனும் நட்பு ஏற்பட்டு அவருடனும் தொடர்பில் இருந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து செல்வகுமார் கண்டித்தும் சத்யா கேட்க மறுத்ததால் கடந்த மாதம் 17 ஆம் தேதி செல்வகுமார் சரமாரியாக தாக்கியுள்ளார்.

Advertisment

rr

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்து பிரபாகர் வற்புறுத்தலின் பேரில் சத்யா பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமுற்ற பிரபாகரன் தரப்பு தற்போது இது தொடர்பான வீடியோ ஆதாரத்தை ஊடகத்தினருக்கு அனுப்பியதுடன், வாட்ஸ் அப்பிலும் பகிர்ந்துள்ளது.

இதையடுத்தே இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி தி.மு.க.முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரை இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே திமுக தலைமை செல்வக்குமாரை தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம், அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் உறுப்பினர் எஸ். செல்வக்குமார் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார்.