தூத்துக்குடியில் முன்னாள் பாஜக எம்.பி வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜகவின் முன்னாள் எம்பியும் தமிழக பாஜகவின் துணைத் தலைவருமான சசிகலா புஷ்பாவிற்கு தூத்துக்குடியில் சொந்தமாக வீடு உள்ளது. இன்று சசிகலா புஷ்பா கன்னியாகுமரியில் கட்சியின் சார்பில் நடத்தப்படும் விழாவிற்குச்சென்றுவிட்டதால் மர்ம நபர்கள் அவரது வீட்டில் கடுமையானதாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் அவரது கார், செடிகள் வைத்திருந்த தொட்டிகள், ஜன்னல் கண்ணாடிகள் நாற்காலிகள் என வீடு முழுவதும் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.