Advertisment

அத்திக்கடவு-அவினாசி திட்டம் ஜனவரியில் மக்களுக்கு அர்ப்பணிப்பு

Athikadavu Avinasi project dedicated to people in January

அத்திக்கடவு - அவினாசி திட்டப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால்வருகிற ஜனவரி மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என வீட்டு வசதிதுறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.

Advertisment

ஈரோட்டில் வீட்டு வசதிதுறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விவசாயிகள் ஒத்து வராததால்அந்த வேலைகளைத்துவங்காமல் நிறுத்தி வைத்திருந்தனர். நாங்கள் அந்த விவசாயிகளின் வீடு வீடாகச் சென்று அவர்களைச் சந்தித்து இதில் இருக்கும் நன்மைகள் மற்றும் தீமைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.

Advertisment

இதில் இருக்கும் பிரச்சனைகளைப் பேசி அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளையும் பார்த்து நாங்கள் இந்தப் பணியைத்துவங்கியுள்ளோம். இதற்கு முன்பு ஆட்சியிலிருந்தவர்கள்ஏன்விவசாயிகளைப் பார்த்துப் புரிய வைத்து இந்த வேலையைச் செய்யவில்லை.

பவானி காலிங்கராயன் தடுப்பணையில் நடைபெற்று வரும் அத்திக்கடவு - அவினாசி திட்டப் பணிகளை வரும் ஜனவரி 15-க்குள் முடிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். எனவே அத்திக்கடவு - அவினாசி திட்டப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால்வருகிற ஜனவரி மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் ” எனவும் குறிப்பிட்டார்.

muthusamy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe