Assembly meeting; When will the Governor give permission ...?

தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் காலம் என்பதால், இந்த ஆண்டு முழு பட்ஜெட்டை எடப்பாடி அரசால் தாக்கல் செய்ய முடியாது. இடைக்கால பட்ஜெட்டைத்தான் தாக்கல் செய்ய முடியும். நடப்பாண்டிற்கான சட்டமன்றகூட்டம் கவர்னர் உரையுடன் ஜனவரியில் கூட்டப்பட வேண்டும்.

Advertisment

அதற்கேற்ப ஜனவரி இரண்டாவது வாரத்தில் சட்டமன்றத்தைக் கூட்டுவது குறித்து கவர்னர் மாளிகைக்கு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜனவரி 21ஆம் தேதியாகியும் சட்டமன்றம் கூட்டுவது குறித்து கவர்னரிடமிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.

Advertisment

கவர்னரின் அறிவிப்பிற்காக சட்டமன்ற செயலகம் காத்திருக்கிறது. இந்த மாதம் இறுதிக்குள் ராஜ்பவனிலிருந்து அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கிறார்கள். இதற்கிடையே, இடைக்கால பட்ஜெட் என்றாலும், இது தேர்தல் காலம் என்பதால் மக்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்கிறது கோட்டை வட்டாரம்.