Advertisment

சட்டமன்ற தேர்தல்-2026; முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

Assembly Elections 2026 CM MK Stalin main advice

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுகவில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது என ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும் இந்த குழுவின் மூலம் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Advertisment

அதோடு இந்த குழுவினர் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளைப் பரிந்துரைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த குழுவினர் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பல்வேறு அணியின் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கூட்டங்களில் பல்வேறு முக்கிய முடிவு எடுக்கப்பட்டும் வருகிறது எனத் தகவல் வெளியாகி இருந்தது.

Advertisment

இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் அமெரிக்காவில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (08.09.2024) இரவு 07.30 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்க உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருவது குறிப்பிடத்தக்கது.

America
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe