சட்டப்பேரவையில் 2022-23 நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதங்கள் முடிந்த நிலையில் 24 ஆம் தேதியோடு நிறைவுபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ''மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்காக மீண்டும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை கூட இருக்கிறது” என்று தெரிவித்தார்.
“ஏப்ரல் 6ஆம் தேதி கூடுகிறது சட்டமன்றம்” - அப்பாவு (படங்கள்)
Advertisment