Aspire Swaminathan tweets

Advertisment

அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜா அதிமுகவின் பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நேற்று (30.11.2021) அதிரடியாக நீக்கப்பட்டார். தற்போதைய அதிமுக தலைமையாக உள்ள ஓபிஎஸ், இபிஎஸ் குறித்து எதிரான கருத்துகளை அன்வர் ராஜா தெரிவித்துவந்த நிலையில், அவர் நீக்கப்பட்டார். கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிரான வகையில் செயல்பட்டதால் அன்வர் ராஜா நீக்கப்பட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டு அரசியலில் ஐ.டி. விங்கைக் கொண்டுவந்தவரும், அதிமுகவிற்கு தனி ஐ.டி. விங்கை உருவாக்கியவருமானஆஸ்பயர் சுவாமிநாதன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார்.

Advertisment

அதில் அவர், “பேசியே வளர்ந்த கட்சியாம்.. கூட்டங்களில் பேச தடை. டி.வி.யில் பேச தடை. உள் அரங்குகளில் விவாதிக்க தடை.அடிக்க, உதைக்க பாய்வார்கள். தனக்கு கிடைத்துள்ள ‘அந்த டெல்லி தகவல்களை’ செயற்குழுவில் பேசி, நெருக்கடியை ஏற்படுத்திவிட்டால்? அதற்குதான் அன்வர் பாய் நீக்கமோ? அடுத்த wicket யாருனு தெரியுமா?” எனப் பதிவிட்டுள்ளார். இது தற்போது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.