Skip to main content

“தேவைகளை கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள்..” - அமைச்சர் கே.என். நேரு

Published on 12/02/2022 | Edited on 12/02/2022

 

"Ask the need and receive  .." - Minister KN Nehru

 

தமிழக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று (12ஆம் தேதி) நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட ஏழு  வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு சேகரித்தார்.

 

அந்நிகழ்ச்சியில் அவர், “தற்போது ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட ஏழு வார்டுகளில் கட்டாயம் நாம் வெற்றி பெற்றால் மட்டுமே மேயர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க முடியும். எனவே மேயரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஸ்ரீரங்கத்தால் ஏற்பட வேண்டும். திருச்சி மாவட்டத்திற்கு எப்படி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறதோ அதே போல, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கும் போக்குவரத்து இடையூறு இல்லாமல் வந்து செல்ல ஒரு நல்ல பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

 

காவிரி பாலத்தை, பாலத்தின் முக்கியத்துவத்தை முதல்வரிடம் எடுத்துக் கூறிய உடன் ஒரு புதிய பாலம் அமைக்க 130 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். அண்ணா சிலையில் இருந்து குடமுருட்டி வரை ஒரு சுற்று வட்ட பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நீங்கள் எதைக் கேட்டாலும் நாங்கள் செய்து கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம். எனவே உங்களுடைய வாக்குகளால் ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். திமுகவையும், கூட்டணி கட்சிகளையும் எதிர்த்து போட்டியிட கூடியவர்களுக்கு நீங்கள் வாக்களிப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே ஆட்சி நம்முடைய கையில் இருக்கிறது நீங்கள் திமுகவுக்கு வாக்களித்து தொடர்ந்து உங்களுடைய தேவைகளை எங்களிடம் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்