ஹைதராபாத் தொகுதி எம்.பி.யும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான ஓவைஸி உறுதிமொழி ஏற்கவந்தபோது பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் என்றும் வந்தே மாதரம் என்றும் கூச்சலிட்டனர்.

Advertisment

ovaisi

உறுதிமொழி ஏற்கும் இடத்துக்கு வந்தபிறகும்கூட அவர்கள் கத்திக்கொண்டே இருந்தனர். ஓவைஸியும் பதிலுக்கு நல்லா கத்துங்க என்பதுபோல சைகை செய்தார். பிறகு சபை காவலர்கள் அமைதிப்படுத்தினார்கள்.

அதன்பிறகு உறுதிமொழி ஏற்ற ஓவைஸி, முடிவாக, ஜெய் பீம், ஜெய் பீம், தக்பீர் அல்லாஹ் ஹு அக்பர், ஜெய் ஹிந்த் என்று முழக்கமிட்டார்.

Advertisment

அவர் இப்படி சொன்னவுடன் பாஜகவினர் பார் மாதாக்கீ ஜெய் என்று குரல் எழுப்பினர். பின்னர் சபைக்கு வெளியே பேசிய ஓவைஸி, என்னைப் பார்த்ததும்தான் அவர்களுக்கு அந்த கோஷம் நினைவுக்கு வருகிறது என்றால் நல்லதுதான். முஸாபர்பூரில் குழந்தைகள் உயிரிழந்ததையும் நினைத்துக் கொண்டால் ரொம்ப நல்லது. குறிப்பாக இந்திய அரசியல் சட்டத்தை நினைவில் கொள்வது நல்லது என்று கிண்டலாக கூறினார்.