டெல்லி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றிபெற்றுள்ளது.
டெல்லி சட்டப்பேரவையில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு மீதுநம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. சில நாட்கள் முன்பு தனது கட்சிசட்டமன்ற உறுப்பினர்களுக்கு800 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாக பாஜக மீது அரவிந்த் கெஜ்ரிவால்பகிரங்கமாகக்குற்றம் சாட்டினார். மேலும் ஆம்ஆத்மிஆட்சியைக்கவிழ்க்க தொடர்ந்து பல இடையூறுகளையும் பாஜகசெய்வதாகக்குற்றம் சாட்டி இருந்தார்.
இதனைத்தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன் மொழிந்தார். அந்த தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது. 70 சட்டமன்றஉறுப்பினர்களைக்கொண்ட டெல்லி சட்டப்பேரவையில் ஆளும் கட்சியான ஆம்ஆத்மிக்கு62 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பாஜகவிற்கு 8 சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
இன்று நடந்தநம்பிக்கைக்கோரும்வாக்கெடுப்பில் 62 ஆம்ஆத்மிசட்டமன்ற உறுப்பினர்களில் 58 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு அனைவரும் கெஜ்ரிவாலுக்குஆதரவாகவாக்களித்தனர். மீதமுள்ள 4 பேரில் இருவர் வெளிநாடுகளிலும், ஒருவர் சிறையிலும் உள்ளதால் அவர்கள் வாக்களிக்கவில்லை. இதன்மூலம் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் பெரும் வெற்றி பெற்றார்.