Advertisment

“பிரதமர் படித்தவராக இருக்கவேண்டும்” - அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்

Arvind Kejriwal criticises PM Modi over Rs 2000 notes issue

“படிக்காத பிரதமரிடம் யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்” என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

Advertisment

2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப். 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளைவங்கிகள்பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

Advertisment

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து புதிதாக 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. மேலும் நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என பாஜக அரசு தெரிவித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். இந்த நிலையில் அக்டோபர் முதல் 2000 ரூபாய் நோட்டும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ பிரதமர் 2000 ரூபாய் நோட்டு கொண்டு வருவதன் மூலம் ஊழல் ஒழியும் என்று முதலில் கூறினார். இப்போது 2000 நோட்டுகளை தடை செய்வதன் மூலம் ஊழல் ஒழிந்துவிடும் என்று சொல்கிறார்கள். அதனால்தான் நாங்கள் சொல்கிறோம், பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும். படிக்காத பிரதமரிடம் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அவருக்குப் புரியவில்லை. பொதுமக்கள் அவதிப்பட வேண்டியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Demonitization
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe