Arun Nehru says  if he makes me win, he will speak in Parliament as  voice of  people

Advertisment

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் பகுதி கொசூர் கடைவீதியில் பெரம்பலூர் பாராளுமன்றத்தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருபொதுமக்களிடையே வாக்கு சேகரித்துப்பிரச்சாரத்தை கொசூரில் தொடங்கினார்.

பிரச்சாரத்தை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர், “கொசூர் பகுதியில் குடிநீர் பிரச்சனை நீண்ட காலமாக இருப்பதாகத்தகவல் வந்துள்ளது. நிச்சயமாக இந்த பகுதியினுடைய குடிநீர் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும். எனவே திமுக வேட்பாளர் அருணுக்கு வாக்களியுங்கள் என்றார்”. அதைத் தொடர்ந்துவேட்பாளர் அருண் நேரு உற்சாகமாகத்தனது பிரச்சாரத்தை கொசூரில் தொடங்கி,மத்தகிரி,தொண்டமாங்கினம்,போத்துராவுத்தன்பட்டி, சிவாயம், பாப்பாக்கப்பட்டி,பஞ்சப்பட்டி ஊராட்சி காகம்பட்டியில் தனது பிரச்சாரத்தை முடித்தார்.

Arun Nehru says  if he makes me win, he will speak in Parliament as  voice of  people

Advertisment

முன்னதாக 16 இடங்களில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது, வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது:-கழகத்தின் தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எண்ணிலடங்கா சாதனைகளை செய்திருக்கிறார். உங்களின் உற்சாக வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை போன்ற இளைஞர்களைவெற்றி பெறச் செய்தால் இந்த பகுதிமக்களுடைய குரலாக இருந்து பாராளுமன்றத்தில் உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பாடுபடுவேன். மேலும், கொசூர் பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதாக அமைச்சர் வாக்குறுதி அளித்திருக்கிறார். அதனை அவர் நிறைவேற்றுவார்.

பஞ்சப்பட்டி ஏரிக்கு மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. உதயசூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் கோரிக்கையை நிறைவேற்றுவேன்” என்றார்.

பிரச்சாரத்தின் போது குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்டக் குழு துணைத்தலைவர் தேன்மொழி தியாகராஜன், குளித்தலை ஒன்றியச் செயலாளர் சந்திரன், குளித்தலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தியாகராஜன், கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இல. கரிகாலன், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாநிலச் செயலாளர் கேப்டன் சுபாஷ்ராமன் மற்றும் திமுக நிர்வாகிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.