விருதுநகர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார் அருள்மொழித்தேவன்.

Advertisment

arulmozhidevan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகனான அருள்மொழித்தேவனின் சகோதரி கயல்விழி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி ஆவார். மதுரையில் வசிக்கும் வழக்கறிஞரான அருள்மொழித்தேவனுக்கு விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்கு சீட் வழங்கியிருக்கிறது அக்கட்சி.

Advertisment

இந்நிலையில் அருள்மொழித்தேவன், “நாம் தமிழர் கட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக அடிப்படை உறுப்பினராக இருக்கிறேன். தமிழ் மீதான பற்றினாலேயே எனக்கு சீட் கிடைத்தது” என்கிறார். அருள்மொழித்தேவனின் அண்ணன் டேவிட் அண்ணாதுரை, அமமுக வேட்பாளராக மதுரையில் போட்டியிடுகிறார்.

‘மச்சானுக்கு எம்.பி. சீட் ஒண்ணு பார்சல்’ என்று வலைத்தளங்களில் கலாய்ப்பவர்களுக்கு சீமானின் தம்பிகள் ’முரசொலி மாறன் யாரு? கலைஞரின் அக்கா மகன். கலைஞர் யாரு? முரசொலி மாறனுக்குத் தாய்மாமன். திறமை இருந்ததனால்தானே முரசொலி மாறன் திமுகவில் வளர்ந்தார். மத்திய அமைச்சரும் ஆனார். குடும்ப அரசியல் என்று பேசும் காலமா இது?’ என்று பதிலடி தருகின்றனர்.