Skip to main content

''இங்கேதான் இருப்பேன்... முடிந்தால் கைது செய்யுங்கள்...''-பாஜக அண்ணாமலை சவால்!

Published on 29/03/2022 | Edited on 29/03/2022

 

 

தமிழக அமைச்சர்கள் குறித்து ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அண்மையில் பிஜிஆர் நிறுவன டெண்டர், முதல்வரின் துபாய் பயணம் குறித்து அவர் பேசியிருந்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அண்ணாமலையின் பேச்சுக்கு திமுக தரப்பிலும் வலுவான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக முதல்வரின் துபாய் பயணம் குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு மான நஷ்ட ஈடாக 100 கோடி ரூபாய் நோட்டீஸ் கேட்டு அனுப்பியுள்ளதாகவும், மன்னிப்புக் கேட்காவிட்டால் குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.

 

இப்படி பல்வேறு பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ''நான் இன்னும் அடுத்த 6 மணிநேரம் தமிழக பாஜக அலுவலகத்தில்தான் இருப்பேன். முடிந்தால் கைது செய்து பாருங்கள். என்னை கைது செய்யாவிடில் மக்களிடம் மாட்டிக்கொள்ள போகிறீர்கள். எனக்கு எங்கள் ஊரில் சொந்தமாக ஆடு மாடுகள்தான் இருக்கிறது. 610 கோடி இல்லை. தொட்டம்பட்டியிலிருந்து வந்த என்னை தொட்டுப்பார்க்கட்டும்'' என சென்னையில் அண்ணாமலை பேசியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்