Advertisment

''பிடிக்கவில்லை என்பதற்காக சேற்றைவாரி இறைப்பதா'' - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி  

'' Are you pouring mud on AIADMK for not liking it '' -  Minister Jayakumar

Advertisment

சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று (09.03.2021) காலை 11மணிக்கு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு, அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகதேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த முடிவால் வரும் தேர்தலில் தேமுதிக தனித்து நிற்குமா? அல்லது வேறு யாருடனேனும் கூட்டணி அமைக்குமா என்பது நாளை தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

'' Are you pouring mud on AIADMK for not liking it '' -  Minister Jayakumar

இந்தக் கூட்டத்திற்குப் பின் வெளியே வந்த தேமுதிக கட்சி துணைப்பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், ''கேட்டதொகுதிகளும், எண்ணிக்கையும் தராததால் நாங்கள் அதிமுக - பாஜககூட்டணியில் இருந்து விலகுகிறோம். தேமுதிகவிற்கு இன்றுதான் தீபாவளி. கண்டிப்பாக இந்தத் தேர்தலில் அதிமுக தமிழகத்தில் டெபாசிட் இழப்பார்கள். முக்கியமாக அங்குஇருக்கின்ற கே.பி.முனுசாமி, பாட்டாளி மக்கள் கட்சியுடையஸ்லீப்பிங் செல். அவர் அதிமுகவிற்கு செயல்படவில்லை'' என்றார்.

Advertisment

அதேபோல்கடலூர் பண்ட்ருட்டியில்கட்சிக்கூட்டத்தில்தேமுதிக விஜய பிரபாகரன் பேசுகையில், ''இதுவரை சாணக்கியனாக இருந்தது போதும். இனி தேமுதிக சத்ரியனாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எடப்பாடி தொகுதியில் அதிமுக மண்ணைக் கவ்வும். சட்டப்பேரவை தொகுதியில் அதிமுகவுக்குத் தக்க பதிலடி கொடுப்போம். எனக்கு ஆணவம் இல்லை. ஆனால் உங்கள் ஆணவத்தைத்தான்மக்கள் அடக்கப் போகிறார்கள். நிறைய நடந்துள்ளது, சொன்னால் கலவரம் ஆகிவிடும். உங்களைப் போன்றுகாசுக்கு மாரடிக்கும் கூட்டம் நாங்கள்இல்லை.நாங்கள்கேட்கிற சீட் கிடைக்கவில்லை என்றால் ஒவ்வொரு தொகுதியிலும் சீட் பறிக்கப்படும். அதிமுகவிற்கு இனி இறங்குமுகம்தான். அதிமுக தலைமைதான் சரியில்லை. இதுவரைக்கும் விஜயகாந்தை பாத்துருப்பீங்க, பிரேமலதாவபாத்துருப்பீங்க. இனி அவங்க ரெண்டு பேரையும் கலந்து விஜயபிரபாகரன பார்ப்பீர்கள்'' என்றார்.

'' Are you pouring mud on AIADMK for not liking it '' -  Minister Jayakumar

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ''அதிமுககூட்டணியில் இருந்து தேமுதிகவிலகியது துரதிர்ஷ்டவசமானது. தேமுதிகவின் பலம் கடந்த தேர்தலிலேயே தெரிந்துவிட்டது.பிடிக்கவில்லை என்பதற்காக அதிமுகமீது சேற்றை வாரி இறைக்கக்கூடாது. கீழ்த்தரமான அரசியலைமுன்னெடுத்தால் அதிமுகபதிலடி கொடுக்கும். தேமுதிக விலகுவதால் அதிமுககூட்டணிக்குப் பாதிப்பு இல்லை. அவர்களுக்குத்தான் பாதிப்பு. எடப்பாடி மற்றுமின்றி234 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும்.பலத்திற்கு ஏற்றவாறுதான்பாஜக, பாமகவுக்கு சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

dmdk admk jayakumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe