Skip to main content

“இப்போ நானும் உள்ள போகணும்னு சொல்றீங்களா?” - உதயநிதி ஸ்டாலின்

Published on 07/03/2023 | Edited on 07/03/2023

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் அமைச்சர் சேகர்பாபு புகைப்படக் கண்காட்சியை நடத்தி வருகிறார். இந்த கண்காட்சியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். 

 

தொடர்ந்து செய்தியார்களைச் சந்தித்த அவர், “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற கண்காட்சியை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாடு செய்துள்ளார். மாணவர்கள் இளைஞர்கள் போன்றோர் வந்து பார்த்துக் கொண்டு உள்ளனர். கலைஞர், முதல்வர் ஸ்டாலினை உழைப்பு உழைப்பு உழைப்பு என பாராட்டினார். அதற்கெல்லாம் சான்று இந்த கண்காட்சி. அனைத்து புகைப்படங்களும் எனக்கு பிடித்த புகைப்படம் தான். மிசாவில் தலைவர் கைது செய்யப்பட்டு இருந்துள்ளார். தலைவர் என்பவரது அரசியல் வாழ்வில் இப்படியெல்லாம் உள்ளது என்கிறார்கள். இப்பொழுது நான் உள்ளே செல்ல வேண்டும் என சொல்ல வருகிறார்களா. நானும் அதையெல்லாம் கேட்டுள்ளேன். ஊழல் வழக்குகள் எதுவும் இல்லை. அனைத்தும் போராட்டம் செய்து சிறை சென்றது தான். மிசா கைதுக்கு பின் தான் நான் பிறந்தேன். நான் பிறந்த பொழுது கலைஞர் சிறையில் இருந்தார். அந்த புகைப்படங்கள் எல்லாம் உள்ளே இருந்தது. அதைப் பார்த்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. 

 

வடமாநில தொழிலாளர்கள் குறித்து வந்தது பொய் செய்தி. அதை மீண்டும் பேச வேண்டாம் என நினைக்கிறேன். பாஜக என்றாலே ஆடியோ வீடியோ கட்சி அது. அந்த கட்சியில் பொறுப்பில் இருந்தவர்களே பாஜகவின் தலைவரை 420 என சொல்லிவிட்டு செல்கிறார்கள். அது 420 கட்சி” எனக் கூறினார்.


 

சார்ந்த செய்திகள்