Advertisment

நீங்க தேர்ந்தெடுத்த எம்எல்ஏவை நீக்கிட்டாங்க... பாடம் புகட்ட வேண்டாமா? ஸ்டாலின் பேச்சு

சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிக்கு வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலையுடன் முடிவடைந்தது.

Advertisment

முன்னதாக அரவக்குறிச்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,

இந்த தேர்தல் ஏன் வந்தது? மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இதே தொகுதியில் நின்று வென்றவர்தான் செந்தில் பாலாஜி. அவர் ஐந்து ஆண்டுகாலம் இந்த தொகுதிக்கு நல்லது செய்யணும் என்று வாக்களித்து வெற்றி பெற வைத்தீர்கள். ஆனால் அவரால் ஐந்து வருடம் பணியாற்ற முடிந்ததா? திருவாரூரில் இடைத்தேர்தல் என்றால் கலைஞர் மறைந்ததால் இடைத்தேர்தல். சூலூரில் ஆளும் கட்சி உறுப்பினர் மறைந்ததால் இடைத்தேர்தல். திருப்பரங்குன்றம் ஆளும் கட்சி உறுப்பினர் மறைந்ததால் இடைத்தேர்தல். ஆனால் இந்த தொகுதிக்கு ஏன் இடைத்தேர்தல். 18 எம்எல்ஏக்கள் பதவியை பறித்தபோது செந்தில் பாலாஜியின் பதவியையும் சேர்த்து பறித்தார்கள்.

aravakurichi by election mk stalin campaign

Advertisment

18 எம்எல்ஏக்கள் ஒன்று சேர்ந்து முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று மனு அளித்தார்கள். ஆட்சியை மாற்ற வேண்டுமென்றோ, ஆட்சியை கவிழ்க்க வேண்டுமென்றோ மனு அளிக்கவில்லை. முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை. ஆகையால் அவரை மாற்ற வேண்டும் என்று மனு அளித்தார்கள்.

தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் முதல் அமைச்சராக இருந்திருக்கிறார்கள். காமராஜர், பக்தவத்சலம், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சராக இருந்திருக்கிறார்கள். முதலமைச்சர் என்பது பெரிய துறை. எல்லா துறைகளையும் கவனிக்கிறதுதான் முதலமைச்சர் வேலை. காவல்துறையை கையில் வைத்திருப்பார்கள். சில சிறு துறைகளை கையில் வைத்திருப்பார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி காவல்துறை மட்டுமல்ல, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறையைவைத்துக்கொண்டார்.

ஏனென்றால் எல்லா துறைகளையும்விட பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையில்தான் அதிகமாக கொள்ளையடிக்க முடியும். ஆகையால் தவறு நடக்கிறது, லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதால் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று மனு அளித்தார்கள். இந்த கோரிக்கையை வைத்ததால் இவர்களை நீக்கிவிட்டார்கள். நீங்க தேர்ந்தெடுத்த எம்எல்ஏவை நீக்கிவிட்டார்கள். நீங்க தேர்ந்தெடுத்த எம்எல்ஏவை நீக்கினார்கள் என்றால், அப்படி நீக்கியவர்களுக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டாமா?

நான்கு தொகுதியில் ஏற்கனவே முதல்கட்ட பிரச்சாரத்தை முடித்தேன். இரண்டாம் கட்ட பிரச்சார்த்தை இங்கு முடிக்கிறேன். நான் அறிந்தவரையில் நான்கு தொகுதியில் இந்த தொகுதியில்தான் செந்தில் பாலாஜிதான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆட்சி மாற்றத்திற்கு இந்த நான்கு தொகுதிதான் பயன்படப்போகிறது. ஏற்கனவே 115 நாம் வந்துவிட்டோம். ஆகையால் இதுவும் சேர்ந்துவிடும். இவ்வாறு பேசினார்.

campaign byelection Aravakurichi senthil balaji mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe