அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

Advertisment

senthil balaji

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இதைத்தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கின்றன. திமுக சார்பில் செந்தில் பாலாஜியை நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், கரூர் மக்களவை தொகுதி திமுக கூட்டணி, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார் செந்தில்பாலாஜி. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் தெரிவித்தது, செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்ததிலிருந்து நல்ல ஒத்துழைப்பு வழங்குகிறார். அவர் ஏற்பாடு செய்த அனைத்து பொதுக்கூட்டங்களுமே சிறப்பாக நடந்துள்ளது. மேலும் தற்போது அவர், மக்களவை தொகுதி வேட்பாளர் ஜோதிமணிக்கும் உதவி செய்து வருகிறார். ஒரே கூட்டணியில் இருந்தாலும் சில இடங்களில் கட்சி நிர்வாகிகள் இன்னொரு கட்சி வேட்பாளருக்கு துணை நிற்க மாட்டார்கள். ஆனால் செந்தில்பாலாஜி பிரச்சாரம் முதற்கொண்டு அனைத்திலும் கூட்டணி கட்சியினருக்கு உறுதுணையாக உள்ளார். அவருக்கு கரூரில் செல்வாக்கும் உள்ளது, மேலும்அவரது நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் திமுக மேலிடத்திற்கு பிடித்திருக்கிறது.அதனால் அவருக்குதான் இந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் சீட்டு வழங்கப்படும்.