Advertisment

கருத்து சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்தும் அரசு கேபிள் டிவி!!!

செய்திச் சேனல்களை மிரட்டும் அரசு கேபிள் டிவி இப்பொழுது ஒருபடி மேலே போய், செய்திச் சேனல்களில் யார்வேலை செய்ய வேண்டும் என முடிவு செய்யக்கூடிய இடத்தில் கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருக்கிறது.

Advertisment

actv

எந்த செய்திச் சேனல்களிலும் தமிழக அரசுக்கு எதிராகவோ, பாஜகவுக்கு எதிராகவோ பேசுபவர்கள் இருக்கக்கூடாது என தமிழக அரசு,கேபிள் டிவி மூலம் கட்டுப்படுத்துகிறது. அதில், பல டிவிக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சன் நியூஸ் அரசு கேபிள்களில் வருவதே இல்லை. புதிய தலைமுறை டிவி இந்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. காவேரி டிவியில் இருந்து ஜென்.ராம் என்கிற பத்திரிகையாளர் வெளியேற்றப்பட்டுள்ளார். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சத்தியம் டிவியை அரசு கேபிளில் இருந்து அரசு நீக்கியது.

Advertisment

இப்போது அரசு கேபிளில் சத்யம் டிவியை கொண்டு வந்ததோடு, அங்கு உள்ள பொறுப்பாசியர் அரவிந்த் ஷாசனை வேலையை விட்டு நீக்குங்கள் என கூறியுள்ளது. அவர் வேலையில் இருந்தால் உங்கள் டிவி இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரித்துள்ளதாம்.

goverment tamilnadu arasu cable tv show
இதையும் படியுங்கள்
Subscribe