Skip to main content

கருத்து சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்தும் அரசு கேபிள் டிவி!!!

Published on 29/07/2019 | Edited on 29/07/2019

 

செய்திச் சேனல்களை மிரட்டும் அரசு கேபிள் டிவி இப்பொழுது ஒருபடி மேலே போய், செய்திச் சேனல்களில் யார்வேலை செய்ய வேண்டும் என முடிவு செய்யக்கூடிய இடத்தில் கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருக்கிறது. 

 

actv

எந்த செய்திச் சேனல்களிலும் தமிழக அரசுக்கு எதிராகவோ, பாஜகவுக்கு எதிராகவோ பேசுபவர்கள் இருக்கக்கூடாது என தமிழக அரசு, கேபிள் டிவி மூலம் கட்டுப்படுத்துகிறது. அதில், பல டிவிக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 
 

சன் நியூஸ் அரசு கேபிள்களில் வருவதே இல்லை. புதிய தலைமுறை டிவி இந்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. காவேரி டிவியில் இருந்து ஜென்.ராம் என்கிற பத்திரிகையாளர் வெளியேற்றப்பட்டுள்ளார். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சத்தியம் டிவியை அரசு கேபிளில் இருந்து அரசு நீக்கியது. 
 

இப்போது அரசு கேபிளில் சத்யம் டிவியை கொண்டு வந்ததோடு, அங்கு உள்ள பொறுப்பாசியர் அரவிந்த் ஷாசனை வேலையை விட்டு நீக்குங்கள் என கூறியுள்ளது. அவர் வேலையில் இருந்தால் உங்கள் டிவி இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரித்துள்ளதாம்.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

பெரும்பான்மையை இழந்தது இம்ரான் கான் அரசு!

Published on 30/03/2022 | Edited on 30/03/2022

 

Imran Khan government loses majority!

 

பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கானின் அரசு பெரும்பான்மையை இழந்தது. 

 

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை, அதன் முக்கிய கூட்டணி கட்சியான எம்.கியூ.எம். கட்சி திடீரென வாபஸ் பெற்றுள்ளது. இதனால் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. 

 

இம்ரான்கான் அரசுக்கு ஆதரவைத் திரும்பப் பெற்றதுடன் மட்டுமல்லாமல், எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியுடனும் எம்.கியூ.எம். கட்சி உடன்படிக்கையையும் செய்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு, நாளை (31/03/2022) நடைபெற உள்ளது. 

 

மொத்தம் 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், 172 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும். ஆனால் எம்.கியூ.எம். கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டிருப்பதால், இம்ரான் கான் அரசுக்கான ஆதரவு 164 ஆக குறைந்துள்ளது. அதே நேரம், எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக அதிகரித்துள்ளது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு தோல்வி அடைவது ஏறக்குறைய உறுதிச் செய்யப்பட்டுவிட்டது. 

 

விலைவாசி உயர்வு உள்ளிட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித் தவித்து வரும் நிலையில், இதற்கு இம்ரான் கானின் மோசமான ஆட்சியே காரணம் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கினர். இதைத் தொடர்ந்து, இம்ரான் கானின் அரசைக் கவிழ்க்கும் முயற்சியிலும் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளனர். 

 

Next Story

பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க உயர் நிலைக்குழுவை அமைத்தது பஞ்சாப் அரசு!

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

 

PM NARENDRA MODI PUNJAB TRIP GOVERNMENT FORM THE COMMITTEE

 

பஞ்சாப்பில் தனக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திடம் பிரதமர் மோடி நேரில் விளக்கினார். 

 

இதற்கிடையில், பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் நாளை (07/01/2022) விசாரிக்கிறது. 

 

பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி காரி சென்ற போது, சாலையில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தால், அவரது கார் 20 நிமிடங்கள் வரை மேம்பாலத்திலேயே நிற்க வேண்டியிருந்தது. இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு எனக் கூறிய மத்திய உள்துறை அமைச்சகம், இது குறித்து விளக்கம் அளிக்க பஞ்சாப் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. 

 

பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏதுமில்லை என்றும், இதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் எதுவுமில்லை என்றும் அம்மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி விளக்கம் அளித்தார். 

 

இந்த நிலையில், பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கவலைத் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, குடியரசுத்தலைவரை பிரதமர் நரேந்திர மோடி இன்று (06/01/2022) நேரில் சந்தித்தார். அப்போது பஞ்சாப் பயணத்தின் போது நிகழ்ந்தவற்றை குடியரசுத்தலைவரிடம் பிரதமர் எடுத்துரைத்தார். 

 

முன்னதாக, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவும், பிரதமரிடம் தொலைபேசி மூலம் பஞ்சாப்பில் நடந்தது குறித்து கேட்டறிந்தார். 

 

இதனிடையே, பிரதமரின் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக, மூத்த வழக்கறிஞர் மணிந்தர்சிங் தொடுத்த பொதுநல மனுவை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் ஒரு நகர்வாக, பிரதமரின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க, இரண்டு பேர் கொண்ட உயர்நிலைக் குழு ஒன்றை அம்மாநில அரசு அமைத்துள்ளது. 

 

இக்குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி, மாநில அரசின் முதன்மைச் செயலாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவானது, பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குளறுபடிகள் இருந்ததா என விசாரித்து மூன்று நாட்களில் அறிக்கையைச் சமர்ப்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.