பிரதமர் மோடிக்கு முட்டாள்கள் தின வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்வதாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி கிண்டலாக தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஜிக்னேஷ் மேவானி. இவர் தலித்துகளுக்கு எதிராக பா.ஜ.க. செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டை முன்னிறுத்தி அரசியலில் களம் காண்பவர்.
இந்நிலையில், இன்று ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நரேந்திரமோடி முட்டாள்கள் தினத்தை புதிய உச்சத்திற்கு தூக்கிச் சென்றவர். சொல்லப்போனால், இன்றைய தினமே அவருக்கானதுதான். கூச்சமேயில்லாமல் தொடர்ந்து பல போலி வாக்குறுதிகளைத் தந்து, அதன்மூலம் அவர் வரலாறு படைப்பார் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம். நரேந்திர பாய்.. எங்களது வாழ்த்துகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு’ என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.