Approval of 16 resolutions! Executive Committee members who gave permission!

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று (11/07/2022) காலை 09.00 மணிக்கு அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் துவங்கியது. இந்த நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் வந்துள்ளனர்.

Advertisment

முதலில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களுக்கு செயற்குழு உறுப்பினர்கள் அனுமதி அளித்துள்ளனர். இந்தச் செயற்குழுவில் மொத்தம் 16 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment