
பல்வேறு வகையானமோதல்களுக்குபிறகு கடந்த 11 ஆம் தேதிவானகரத்தில்இரண்டாவது முறையாக அதிமுகபொதுக்குழுகூட்டம் நடைபெற்று அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலபொதுச்செயலாளராகதேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்துஓபிஎஸ்மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி நீக்க, மறுபுறம் எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்களைஓபிஎஸ்நீக்கி வருகிறார். அதேபோல் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான வழக்கும் உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் வகித்துவந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர்பதவியில்நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட இருப்பதாகதகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்பொழுது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரைதமிழக எதிர்க்கட்சி துணைத்தலைவராகநியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற அதிமுகஎம்.எல்.ஏக்கள்கூட்டத்தில்ஏகமனதாகஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சி துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எதிர்க்கட்சி துணை செயலாளராக அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி செயல்படுவார் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஓபிஎஸ் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர், பொருளாளர், அடிப்படை உறுப்பினர் என அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மிச்சமிருந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியும் ஆர்.பி.உதயகுமாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)