Appointment of P. Valarmati as the Women's Secretary of the AIADMK - OpS - EPS

Advertisment

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இன்று (23/07/2021) அறிவிப்பை வெளியிட்டனர்.

அதில், "அ.தி.மு.க.வின் மகளிரணிச் செயலாளராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க.வின் மகளிரணி இணைச் செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், இலக்கிய அணிச் செயலாளராக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், வர்த்தக அணி செயலாளராக வெங்கட்ராமன், வர்த்தக அணியின் இணைச் செயலாளராக ஆனந்தராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்". இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.