tamil nadu assembly

Advertisment

தமிழக தலைமைச் செயலாளர் பதவி ரேஸில் இருந்த கவர்னரின் செயலாளர் ராஜகோபால், பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில்சரியாக செயல்படாமல் நக்கீரன் மீது எடுத்த அவசர நடவடிக்கைக்காக நீதிமன்றத்தின் கண்டனத்தை பெற்றதால் அவரை தலைமைச் செயலாளர் பதவியில் நியமிக்க மத்திய அரசு விரும்பவில்லை.

இந்த சூழ்நிலையில் நிதித்துறை செயலாளராக இருக்கும் சண்முகத்தை தலைமைச் செயலாளர் பதவிக்கு தமிழக அரசு தேர்ந்தெடுத்து அதற்கான பரிந்துரை கோப்பை கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைத்தது. நேற்று அனுப்பிய அந்த கோப்பில் கையெழுத்துப்போடாமல் இருந்ததாகவும், நிர்மலா தேவி விவகாரத்தில் கவர்னர் மாளிகைக்கு ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து ராஜகோபால்தான் காப்பாற்றினார் என்பதால் அவர் தலைமைச் செயலாளராக வரவேண்டும் என்று கவர்னர் விரும்பியதாகவும் கூறப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் டெல்லியில் இருந்து வந்த உத்தரவையடுத்து, இன்று காலை புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் நியமிப்பதற்கான கோப்பில் கையெழுத்திட்டுள்ளார் கவர்னர். இதையடுத்து நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகம் புதிய தமிழக தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது.