Advertisment

தமிழகத்திற்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!

Appointment of BJP Election Officers for Tamil Nadu

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான ஆயத்த பணிகளைஅரசியல் கட்சிகள் முடுக்கி விட்டுள்ளது.

Advertisment

அந்த வகையில், நாடாளுமன்றத்தேர்தலையொட்டி 23 மாநிலங்களுக்குத்தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டிற்கு மக்களவைத்தேர்தல் பொறுப்பாளர்களாக அரவிந்த் மேனனை பாஜக தலைமை நியமித்துள்ளது. இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று புதுச்சேரி மாநிலத்திற்கான பொறுப்பாளராக நிர்மல் குமாரும், சுரானாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment
Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe