Advertisment

எப்போது விடியும்?; “6 மணிக்கே விடுஞ்சுருச்சு..” - தக் லைஃப் செய்த அப்பாவு

appavu who lived a thug life in the legislature

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்றும்(9.12.2024), நாளையும்(10.12.2024) நடைபெறுகிறது. முதல்நாளான இன்று சட்டப்பேரவை கூடிய உடன், மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெஞ்சூரி, தொழிலதிபர் ரத்தன் டாடா, மூத்த பத்திரிக்கையாளர் முரசொலி செல்வம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் 2 நிமிடங்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர்.

Advertisment

அப்போது, அதிமுக எம்.எல்.ஏ ராஜன்செல்லப்பா, “தமிழகத்தின் இரண்டாவது மாநகராட்சியான மதுரை மாநகராட்சியின் விரிவாக்க பணியில் பாதாளச் சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் எனக் கடந்த மூன்று கூட்டத் தொடரிலும், அமைச்சர் உறுதியளித்திருந்தார். ஆனால் இதுவரை விரிவு செய்யப்பட்ட வைகை தென்கரை பகுதியில் பாதாளச் சாக்கடை அமைக்கவில்லை. அதனால் சாலையும் சீர்படுத்தப்படவில்லை. இப்படி சீர்கெட்ட பகுதியாக திருபெருங்குன்றம் பகுதியும் அதனைச் சுற்றியுள்ள பகுதியும் இருக்கிறது. அதனால் நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று உறுதியளித்தது எப்போது முடியும்? எப்போது விடியும்? என்று கூறுங்கள்” என்றார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து அவைத் தலைவர் அப்பாவு, “6மணிக்கே விடிஞ்சுறீச்சி.. விடிஞ்சுதான் வந்திருக்கீயா; நல்ல விடியல்தான் ஆகிடுச்சு என்று நகைச்சுவையாக பேசினார். இதனால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

அதன்பிறகு ராஜன் செல்லப்பாவின் கேள்விக்கு துறைசார்ந்த அமைச்சர் கே.என்.நேரு, “பாதாளச் சாக்கடை திட்டம் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தங்களில் குஜராத்தை சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் பங்கேற்று இருக்கிறது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விடக் கூடுதலாக நிதி தேவைப்படுவதால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் காலதாமதம். விரைவில் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும்” என்றார்

admk APPAVU
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe