
இராமநாதபுரத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவரை வரவேற்பது குறித்து அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம் இன்று ராமநாதபுரத்தில் நடந்தது. இதில் அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க சிறுபான்மை பிரிவு மாநிலச்செயலாளருமான அன்வர் ராஜா, சசிகலா சிறையில் இருந்து வந்தால், அவர் வந்ததற்குப் பிறகு என்ன முடிவு எடுக்கிறாரோ அதனைப் பொறுத்துதான் அரசியலில் தாக்கம் இருக்கும் என்றார்.
அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அன்வர் ராஜாவின் இந்தக் கருத்து அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us