Advertisment

அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா நீக்கம்!

 Anwar Raja fired from AIADMK

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அன்வர்ராஜா அதிமுகவின் பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும்நீக்கப்பட்டுள்ளார். தற்போதைய அதிமுக தலைமையாக உள்ள ஓபிஎஸ், இபிஎஸ் குறித்து எதிரான கருத்துக்களை அன்வர்ராஜா தெரிவித்து வந்த நிலையில், தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கும் எதிரான வகையில் செயல்பட்டதால் அன்வர்ராஜா நீக்கப்பட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Advertisment

நாளை அதிமுக செயற்குழு நடைபெற இருக்கின்ற நிலையில் செயற்குழு கூடுவதற்கு முன்பே அன்வர்ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அன்வர்ராஜா கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டைச் சொன்னார், கருத்தைச் சொன்னார் என்ற அடிப்படையில் அவர் கூட்டத்தில் பங்கு பெறக் கூடாது வெளியேறவேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அருண்மொழிவர்மன் உள்ளிட்டோர் வலியுறுத்தியதாகக் கூறப்படும் நிலையில் தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ops_eps admk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe