எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிறுவன ஆலோசகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை..! 

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், கடந்த 25ஆம் தேதி சோதனை செய்தனர். அப்போது சென்னையில் உள்ள அவரது வீட்டிலும், கரூரில் 20 இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிறுவன ஆலோசகர் ரவிக்குமார் என்பவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, அண்ணாநகர் 6வது அவென்யூ, சாம் டவர் கட்டடத்தில் உள்ள ராம்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

admk mr vijayabaskar
இதையும் படியுங்கள்
Subscribe