Skip to main content

எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிறுவன ஆலோசகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை..! 

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், கடந்த 25ஆம் தேதி சோதனை செய்தனர். அப்போது சென்னையில் உள்ள அவரது வீட்டிலும், கரூரில் 20 இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது.

 

இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிறுவன ஆலோசகர் ரவிக்குமார் என்பவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, அண்ணாநகர் 6வது அவென்யூ, சாம் டவர் கட்டடத்தில்  உள்ள ராம்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விஜயபிரபாகரன் பெயரிலேயே பெரிய ராசி இருக்கிறது” - ராஜேந்திரபாலாஜி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
"Vijay Prabhakaran has a great sign in his name" - Rajendra Balaji

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் அறிமுகக் கூட்டம் மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமை தாங்கினார். தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன், தனது வெற்றிக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் வாக்கு சேகரித்துப் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி. ராஜேந்திர பாலாஜி பேசுகையில், “இந்தத் தொகுதிக்குள் தான் எய்ம்ஸ் மருத்துவமனை, காமராஜர் பல்கலைகழகம், ஏர்போர்ட் எல்லாமே வருகிறது. எனவே  இவை நமக்குத்தான் சொந்தம். மொத்தத்தில் தென்மாவட்ட மக்களின் கெப்பாசிட்டி தம்பி விஜய பிரபாகரன் கையில் உள்ளது. இவர் வெற்றிபெற்று எம்.பி. ஆவதை இனி யாராலும் தடுக்க முடியாது. தமிழர்களின் உரிமைக்காகவும் பெருமைக்காகவும் உழைக்கின்ற கட்சி அ.தி.மு.க.

அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி ராசியான கூட்டணி. தற்பொழுது உள்ள எஸ்.டி.பி.ஐ. இஸ்ஸாமிய அமைப்புகளில் மிகவும் வலிமையானது. அந்த அமைப்பு நமக்கு வலுவான துணையாக நிற்கிறது. இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என மதம் பார்க்காமல் அனைவருக்கும் உழைத்த கட்சி அ.தி.மு.க. எங்களை இனத்தை, சொல்லி மதத்தைச் சொல்லி பிரிக்க முடியாது. சிவகாசியில் பேசிய இ.பி.எஸ். ஓங்கிய குரலில் கொட்டும் முரசுக்கு ஓட்டு கேட்டு முழங்கினார். அது டெல்லி வரைக்கும் ஒலித்திருக்கிறது. கூட்டணிக் கட்சிக்கு மரியாதை கொடுத்து அங்கீகரிக்கக் கூடிய கட்சி அ.தி.மு.க.. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழுக்காகப் பெருமை சேர்த்தவர். நாங்கள் தற்போது கூட்டணியில் இல்லாவிட்டாலும், அவர் அ.தி.மு.க. கூட்டணியில்தான் முதன் முதலில் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

"Vijay Prabhakaran has a great sign in his name" - Rajendra Balaji

கூட்டணி என்றாலே முதலில் அமர்ந்து பேசிவிட வேண்டும். தொகுதிகள் சின்னம் ஆகியவற்றைச் சரியாக முடிவு செய்யவேண்டும். தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் பெயரில் பெரிய ராசி இருக்கிறது, வசியம் இருக்கிறது. அது எனக்கு நன்றாகத் தெரியும் அவர் வெற்றி நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அவர் ஒன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தார் என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். நாளை முதல் தொகுதியில் 100 இடங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் தேர்தலில் பிரச்சாரமே வேண்டாம் என்று ஒரு அணியும், ஓட்டு போட்டால் போடுங்கள் இல்லாவிட்டால் போங்க என்று ஒரு அணியும் சுற்றித் திரிகிறது. விஜயபிரபாகரன் வெற்றிக்கு அ.தி.மு.க. கூட்டணி கடுமையாக இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். கூட்டணிக்  கட்சித் தலைவர்கள், அவருடைய வெற்றிக்குப் பாலமாக இருக்கவேண்டும். உங்களுக்குத் தேவையானவற்றை அ.தி.மு.க. இயக்கம் செய்யும். அதற்கு நான் முழு பொறுப்பு. தம்பி விஜய பிரபாகரன் பொறுப்பு. அதிமுக அடுத்து ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.” என்றார். 

Next Story

“தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க.வின் ஊழல் அம்பலமாகிவிட்டது” - திண்டுக்கல் சீனிவாசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
"BJP's corruption exposed through election papers" - Dindigul Srinivasan

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. கூட்டனியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் நெல்லை முகமது முபாரக் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அ.தி.மு.க. பொருளாளரும் முன்னாள் வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் - முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விசுவநாதன் ஆகியோர் தலைமையில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது திண்டுக்கல் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன். திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் ராஜசேகர்.ஜெ பேரவை செயலாளர் பாரதி முருகன் மற்றும் பகுதி செயலாளர் முன்னிலையில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பல வார்டுகளில் தீவிரமாக பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர். அப்போது பொதுமக்கள் வேட்பாளருக்கு கும்ப மரியாதை எடுத்தும், ஆராத்தி எடுத்தும் வரவேற்றனர்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசும் போது, “வரலாறு காணாத ஊழலை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு செய்துள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க.வின் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இனியும் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை. திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்கை அமோக வெற்றிப்பெற செய்வதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு நமது நன்றிக் கடனை செலுத்துவோம் என்று கூறினார்.

அதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசும் போது, “மகளிர் உரிமைத்தொகையை முறையாக கொடுக்காததால் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது” என்றார். அவரை அடுத்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் முகமது முபாரக் பேசும் போது, “திண்டுக்கல் தொகுதியில் என்ன வளம் இல்லை. பூட்டுத் தொழில் உள்ளது சுற்றுலாத்தலமான கொடைக்கானல் உள்ளது. வழிபாட்டுத்தலமான பழனி உள்ளது. கைத்தொழிலுக்கு நெசவும், சுங்குடி தொழிலும் உள்ளது. புகழ் பெற்ற சிறுமலை வாழை, பலா உட்பட பல்வேறு தொழில்கள் உள்ளது என்னை வெற்றிபெற வைத்தால் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை தொழில் மிகுந்த நகரமாக மாற்றுவேன்” என்று கூறினார்