Advertisment

ஜெயலலிதா ஸ்டைலில் திட்டங்களை அறிவித்த எடப்பாடி!!!

நேற்று முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில் பேரவை விதி 110ன் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டு, பேசியதாவது,

Advertisment

edapadi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

"யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையம் தொடங்கப்படும். அதுவும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் 60 கோடி செலவில் அமைக்கப்படும். இந்த மையத்தின் சிறப்புகளாக, இதில் இளநிலை பட்டப்படிப்பு, மேல்நிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சிபிரிவுகள் மற்றும் இதனுடன் மருத்துவமனை, மாணவர் விடுதி, மாணவியர் விடுதி, பணியாளர்களுக்கு குடியிருப்பு போன்றவையும் ஏற்படுத்தப்படும்.

Advertisment

மேலும், இயற்கையான சூழலில் யோகா சிகிச்சை, இயற்கை உணவு சிகிச்சை, நீர் சிகிச்சை, மண் சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, அக்குபஞ்சர், அக்குபிரஷர், காந்த சிகிச்சை, நிற சிகிச்சை போன்ற பல சிகிச்சைகள் இந்த மையத்தில் அளிக்கப்படும்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

தமிழகத்திலுள்ள 985 துணை சுகாதார நிலையங்களை ஒருங்கிணைத்த சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களாக மாற்ற ரூ.82 கோடியே 2 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும். சென்னை ஸ்டான்லி மருத்துவமணையின் தற்போதுள்ள சிறப்பு அடுக்குமாடி கட்டிடத்தில் கூடுதலாக 3 தளங்கள் ரூ.55 கோடியே 55 லட்சத்தில் கட்டப்படும். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தற்போது கட்டப்பட்டு வரும் புறநோயாளிகள் கட்டிடத்தின் மேல் 5 முதல் 8 வரை 4 தளங்கள் ரூ.42 கோடியே 88 லட்சத்தில் கட்டப்படும். சீர்காழி, திருத்தணி, ஓமலூர், திருச்செந்தூர், பரமக்குடி, பண்ருட்டி, ஆரணி ஆகிய அரசு வட்ட மருத்துவமனைகளுக்கு ரூ.30 கோடியில் தரைத்தளம் மற்றும் 2 தளங்கள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டப்படும்.

தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை திட்டத்தின்படி 20 மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள், 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், 19 வட்ட மருத்துவமனைகள் என 64 அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுக்கொண்டிருக்கும் அவசரகால சிகிச்சை மையங்களுக்கு ரூ.21 கோடியே 27 லட்சத்தில் நவீன கருவிகள் வழங்கப்படும். மதுரை, நெல்லை, சேலம், கோவை மருத்துவக்கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக ‘பிரேக்கி’ தெரப்பியுடன் கூடிய ‘சிடி ஸ்டிமுலேட்டர்’ மற்றும் ‘பங்கர்’ கருவிகள் ரூ.22 கோடியில் நிறுவப்படும்.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

மகப்பேறு மற்றும் குழந்தை நல ஒப்புயர்வு மையம்’ தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்படும். நடப்பாண்டில் ரூ.20 கோடியே 20 லட்சம் செலவில் 96,200 காச நோயாளிகளுக்கு ஊட்டச் சத்து உணவு வழங்கப்படும். ரூ.20 கோடியில் காஞ்சிபுரம், நீலகிரி, நாகை ஆகிய 3 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளிகளில் மாணவியர் விடுதிகள் கட்டப்படும். ரூ.17 கோடியே 20 லட்சம் செலவில் சென்னை எழும்பூர், பூந்தமல்லி, விழுப்புரம் ஆகிய 3 இடங்களில் உள்ள துணை செவிலியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும்"

ஜெயலலிதா இருக்கும்போதுஎதிர்கட்சிகளின் விவாதங்களை தவிர்ப்பதற்காக 110ன் கீழ் பல திட்டங்களை அறிவிப்பார். அதுபோலவே தற்போது எடப்பாடி பழனிசாமியும் அறிவித்து வருகிறார்.

Tamil Nadu edapadi palanisamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe