Skip to main content

ஜெயலலிதா ஸ்டைலில் திட்டங்களை அறிவித்த எடப்பாடி!!!

Published on 26/06/2018 | Edited on 26/06/2018

நேற்று முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில் பேரவை  விதி 110ன் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டு, பேசியதாவது,

 

edapadi


 

 

 


"யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையம் தொடங்கப்படும். அதுவும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் 60 கோடி செலவில் அமைக்கப்படும். இந்த மையத்தின் சிறப்புகளாக, இதில் இளநிலை பட்டப்படிப்பு, மேல்நிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி பிரிவுகள் மற்றும் இதனுடன் மருத்துவமனை, மாணவர் விடுதி, மாணவியர் விடுதி, பணியாளர்களுக்கு குடியிருப்பு போன்றவையும் ஏற்படுத்தப்படும். 

 

 

மேலும், இயற்கையான சூழலில் யோகா சிகிச்சை, இயற்கை உணவு சிகிச்சை, நீர் சிகிச்சை, மண் சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, அக்குபஞ்சர், அக்குபிரஷர், காந்த சிகிச்சை, நிற சிகிச்சை போன்ற பல சிகிச்சைகள் இந்த மையத்தில் அளிக்கப்படும்.  

 

 

 

தமிழகத்திலுள்ள 985 துணை சுகாதார நிலையங்களை ஒருங்கிணைத்த சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களாக மாற்ற ரூ.82 கோடியே 2 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும். சென்னை ஸ்டான்லி மருத்துவமணையின் தற்போதுள்ள சிறப்பு அடுக்குமாடி கட்டிடத்தில் கூடுதலாக 3 தளங்கள் ரூ.55 கோடியே 55 லட்சத்தில் கட்டப்படும். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தற்போது கட்டப்பட்டு வரும் புறநோயாளிகள் கட்டிடத்தின் மேல் 5 முதல் 8 வரை 4 தளங்கள் ரூ.42 கோடியே 88 லட்சத்தில் கட்டப்படும்.  சீர்காழி, திருத்தணி, ஓமலூர், திருச்செந்தூர், பரமக்குடி, பண்ருட்டி, ஆரணி ஆகிய அரசு வட்ட மருத்துவமனைகளுக்கு ரூ.30 கோடியில் தரைத்தளம் மற்றும் 2 தளங்கள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டப்படும்.

 

தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை திட்டத்தின்படி 20 மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள், 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், 19 வட்ட மருத்துவமனைகள் என 64 அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுக்கொண்டிருக்கும்  அவசரகால சிகிச்சை மையங்களுக்கு ரூ.21 கோடியே 27 லட்சத்தில் நவீன கருவிகள் வழங்கப்படும். மதுரை,  நெல்லை, சேலம், கோவை மருத்துவக்கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக ‘பிரேக்கி’ தெரப்பியுடன் கூடிய ‘சிடி ஸ்டிமுலேட்டர்’ மற்றும் ‘பங்கர்’ கருவிகள் ரூ.22 கோடியில் நிறுவப்படும். 

 

 


           
மகப்பேறு மற்றும் குழந்தை நல ஒப்புயர்வு மையம்’ தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்படும். நடப்பாண்டில்  ரூ.20 கோடியே 20 லட்சம் செலவில் 96,200 காச நோயாளிகளுக்கு ஊட்டச் சத்து உணவு வழங்கப்படும். ரூ.20 கோடியில் காஞ்சிபுரம், நீலகிரி, நாகை ஆகிய 3 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளிகளில் மாணவியர் விடுதிகள் கட்டப்படும். ரூ.17 கோடியே 20 லட்சம் செலவில் சென்னை எழும்பூர், பூந்தமல்லி, விழுப்புரம் ஆகிய 3 இடங்களில் உள்ள துணை செவிலியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு  புதிய கட்டிடங்கள் கட்டப்படும்"

 

ஜெயலலிதா இருக்கும்போது எதிர்கட்சிகளின் விவாதங்களை தவிர்ப்பதற்காக 110ன் கீழ் பல திட்டங்களை அறிவிப்பார். அதுபோலவே தற்போது எடப்பாடி பழனிசாமியும் அறிவித்து வருகிறார்.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்குப்பதிவு சதவீதம் குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Election Commission official notification regarding polling percentage

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக  தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அதாவது, திருவள்ளூர் - 68.59 %, வட சென்னை - 60.11 %, தென் சென்னை - 54.17 %, மத்திய சென்னை - 53.96 %, ஸ்ரீபெரும்புதூர் - 60.25 %, காஞ்சிபுரம் - 71.68 %, அரக்கோணம் -74.19 %, வேலூர் - 73.53 %, கிருஷ்ணகிரி - 71.50, தருமபுரி - 81.20 %, திருவண்ணாமலை - 74.24 %, ஆரணி - 75.26 %, விழுப்புரம் - 76.52 %, கள்ளக்குறிச்சி - 79.21 %, சேலம் - 78.16 %, நாமக்கல் - 78.21 %, ஈரோடு - 70.59 %, திருப்பூர் - 70.62 %, நீலகிரி - 70.95 %, கோயம்புத்தூர் - 64.89 %, பொள்ளாச்சி - 70.41 %, திண்டுக்கல் - 71.14 %, கரூர் - 78.70 %, திருச்சிராப்பள்ளி - 67.51 %, பெரம்பலூர் - 77.43 %, கடலூர் - 72.57 %, சிதம்பரம் - 76.37%, மயிலாடுதுறை - 70.09 %, நாகப்பட்டினம் - 71.94 %, தஞ்சாவூர் - 68.27 %, சிவகங்கை - 64.26 %, மதுரை - 62.04 %, தேனி - 69.84 %,விருதுநகர் - 70.22 %, ராமநாதபுரம் - 68.19 %, தூத்துக்குடி - 66.88 %, தென்காசி - 67.65 %, திருநெல்வேலி - 64.10 % மற்றும் கன்னியாகுமரி - 65.44 % பதிவாகியுள்ளன. 

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.