அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ். கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 23ஆம் தேதி வியாழக்கிழமை அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் தற்காலிக கழக அவைத்தலைவர் தமிழ் உசைன் தலைமையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் எனவும், அந்த அழைப்பிதழோடு வந்து கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.