ADVERTISEMENT

புதுச்சேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

11:26 PM Mar 21, 2024 | prabukumar@nak…

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

ADVERTISEMENT

இத்தகைய சூழலில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதற்காக டெல்லியில் மத்திய காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அண்மையில் வெளியாகி இருந்தது. இதனையடுத்து 43 மக்களவைத் தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் கடந்த 12 ஆம் தேதி (12.03.2024) வெளியானது.

ADVERTISEMENT

இந்நிலையில் 57 வேட்பாளர்களை கொண்ட 3 வது பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில் அருணாச்ல பிரதேசம், குஜராத் கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலங்கானா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக உள்ள வைத்திலிங்கம், மீண்டும் புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் காண உள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT