மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எஸ்.ஜெயகுமார் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி 10 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இதையடுத்து இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.
திருவள்ளூரில் ஜெ.மோகனம், மத்திய சென்னையில் கே.பாஸ்கர், வடசென்னையில் எஸ்.ரவி, ஸ்ரீபெரும்புதூரில் பி.பிரபாகரன், கள்ளக்குறிச்சியில் கே.பழனியம்மள் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.