Skip to main content

“அண்ணாமலையின் வீட்டு வாடகை மட்டும்...” - முன்னாள் பாஜக நிர்வாகி சரமாரி கேள்வி

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

"Annamalai's house rent only..." barrage of questions from former BJP executive

 

காவல்துறையில் இருந்தபோது சம்பாதித்து சேர்த்து வைத்த பணத்தை தேர்தலில் செலவு செய்து தேர்தலுக்கு பின் நான் கடனாளியாக இருக்கிறேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

 

ஓரிரு தினங்கள் முன் சென்னை அமைந்தகரையில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, பாஜக தமிழ்நாட்டில் வளர திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று பேசியதாகச் சொல்லப்படுகிறது. அவர் தனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. தனித்து நிற்பது தொடர்பான பேச்சுக்கு வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி, பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

 

இதனைத் தொடர்ந்து நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நான் காவல்துறையில் 9 ஆண்டுகள் சம்பாதித்த அத்தனை பணமும் அவரக்குறிச்சி தேர்தலில் போய்விட்டது. அவையெல்லாம் குருவி சேர்ப்பது போல் நான் சிறுக சிறுக சேர்த்து வைத்தது. டீசல் போடனும், பெட்ரோல் போடனும் என்று எல்லாம் செலவாகிவிட்டது. எலெக்‌ஷன் முடிந்தவுடன் நான் சத்தியமாக கடனாளியாகத் தான் இருக்கிறேன். இந்த நேரத்தில் மறுபடியும் ஒரு பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றால் இந்திய அரசியல் களத்தில் ஒரு பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க 80 கோடி ரூபாயிலிருந்து 120 கோடி ரூபாய் வரை செலவு பண்ண வேண்டும் என்பது பொதுவான கணக்கு. இதை செய்து விட்டு இங்கு கிளீன் பாலிடிக்ஸ் என்று பேச முடியாது” எனக் கூறி இருந்தார். 

 

இந்நிலையில், அண்ணாமலை கூறியதற்கு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம், “காவல்துறை அதிகாரியாக சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்தேன். தற்போது கடன்காரனாக இருக்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார். தற்போது இருக்கும் வீட்டின் வாடகை மாதம் 3.5 லட்ச ரூபாய்; நடத்தும் வார்ரூம் யூடியூபர்கள் செலவு மாதம் 8 லட்சம்; யூடியூபர் ஒருவருக்கு மட்டும் 2 லட்சம்; இப்படி உச்ச ஆடம்பரத்தில் வாழும் அண்ணாமலை அருகே யாரோ வைத்துக் கொண்டு சொல்வது பணம் இல்லாத அரசியல் வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பா.ஜ.க இளைஞரணி தலைவர் சுட்டுக்கொலை; விசாரணையில் பரபரப்பு தகவல்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
BJP youth leader incident happened in madhya pradesh

மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மோனு கல்யாணே (35). இவர் இந்தூர் பகுதி பா.ஜ.க இளைஞரணி துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், சிமன்பாக் சதுக்கம் பகுதியில் பா.ஜ.க சார்பில் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்தக் கூட்டத்தை முன்னிட்டு போஸ்டர் ஒட்டுவதற்காக மோனு கல்யாணே நேற்று அதிகாலை 2 மணியளவில் அந்தப் பகுதிக்கு வந்து தனது நண்பர்களுடன் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தார். 

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத 2 நபர்கள் வந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு மோண்டு கல்யாணேவை சரமாரியாக சுட்டு தள்ளினர். இதில், மோனு கல்யாணே ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து கீழே விழுந்தார். மோனு கல்யாணேவை சுட்ட நபர்களைப் பிடிக்க அவரது நண்பர்கள் முயன்றபோது அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனையடுத்து, படுகாயமடைந்த மோனு கல்யாணேவை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மோனு கல்யாணேவுக்கும், அவரது வீட்டின் அருகே வசிக்கும் அர்ஜுன் பத்ரோட் மற்றும் பியூஷ் பத்ரோட் ஆகியோருக்கும் இடையே ஏற்கெனவே முன்பகை இருந்ததாகவும், இதனால் அவர்கள் இருவரும் மோனு கல்யாணேவை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ததாகவும் தெரியவந்தது. மேலும், தப்பிச் சென்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதனிடையே, மோனு கல்யாணேவின் ஆதரவாளர்கள், கொலையாளிகளில் ஒருவரின் வீட்டை அடித்து நொருக்கியும், அங்கிருந்த வாகனங்கள் மீதும் தீ வைத்து எரித்ததால் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பா.ஜ.க இளைஞரணி தலைவரை துப்பாக்கியால் சுட்டுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான ஆட்சி முக்கியம்” - பிரதமர் மோடி பேச்சு!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Stable governance is important for the development of the country  PM Modi speech

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அதே சமயம் தொடர்ந்து 3வது முறையாக பாஜக ஆட்சி அமைத்தாலும் அடுத்த 5 ஆண்டுகளுக்குக் கூட்டணிக் கட்சிகளின் பிடியில் தான் ஆட்சி இருக்கப்போகிறது. இதற்கிடையே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அறிவிப்பின்படி மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தப் நியமிக்கப்பட்டார். புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் எனவும், எம்பிக்கள் பதவியேற்ற பிறகு மக்களவையின் புதிய சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டணி அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக இன்று (24.06.2024) காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது. இதன் மூலம் 18வது மக்களவையின் முதல் அமர்வு இன்று தொடங்குகிறது. இதனையொட்டி, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 280 எம்பிக்கள் இன்று பதவியேற்க உள்ளனர். மேலும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது தற்காலிக சபாநாயகர் தேர்வு, நீட் தேர்வு முறைகேடு குறித்த பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. 

Stable governance is important for the development of the country  PM Modi speech

இதனையடுத்து 18வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்பி பர்துஹரி மஹ்தாப்க்கு குடியரசுத் தலைவர் முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பர்த்ருஹரி மஹ்தாபுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 8 முறை எம்பியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கொடுக்குன்னில் சுரேஷ்க்கு பதிலாக 7 முறை எம்பியாக இருக்கும் பர்துஹரியை இப்பதவிக்கு நியமனம் செய்தததைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர். இந்த விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் முதல் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் மோடி, நாடாளுமன்றத்திற்கு வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், “நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இது ஒரு புகழ்பெற்ற நாள். சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக நமது சொந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பதவியேற்பு விழா நடக்கிறது.

Stable governance is important for the development of the country  PM Modi speech

இந்தக் குறிப்பிடத்தக்க நாளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் நான் மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவர்களுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடைய நோக்கம், செயல்பாடு ஆகியவற்றுக்காகவே 3 வது முறையாக மக்கள் வாய்ப்பளித்தனர். நாட்டுக்கு சேவை செய்யவும், 140 கோடி மக்களின் கனவை நனவாக்கவும் எம்.பி.க்கள் பாடுபட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான ஆட்சி முக்கியம்” எனத் தெரிவித்தார்.