/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/249_7.jpg)
சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கைக்கடிகாரம் 3 லட்சம் என அதற்கான ரசீதை அவர் வைத்துள்ளாரா என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருந்தார். இதற்குபதில் அளித்த அண்ணாமலை, என் அசையும், அசையா சொத்துகளின் பட்டியலையும் அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என்றும் கூறினார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்திற்கு உள்ளானது.
இந்நிலையில், சேலத்தில் பட்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. சிறு, குறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் 847 பட்டு விவசாயிகளுக்கு9 கோடியே 52 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்த விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், மத்திய அரசு உதவியுடன் தமிழகத்தில் பட்டு நூற்பாலை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “அண்ணாமலை ஊழல் பட்டியலை ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடுவேன் எனச் சொன்னாரெனச் சொல்கிறார்கள். ஆனால், அவர் எங்களைச் சொல்லவில்லை. மத்திய அமைச்சர்களைத் தான் சொல்லி இருப்பார்” எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)