Advertisment

திருச்செந்தூரில் நடைப்பயணத்தை தொடங்கும் அண்ணாமலை

Annamalai starting trek from Tiruchendur on 14th April

Advertisment

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமைப் பயணம் (பாரத் ஜோடோ யாத்ரா) எனும் பெயரில் இந்தியா முழுவதும் பாதயாத்திரை நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதியன்றுதமிழ்நாட்டில் தொடங்கிய தேச ஒற்றுமைக்கான நடைப்பயணம் கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைக் கடந்து டெல்லி வழியாக தற்போது காஷ்மீரில்நுழைந்துள்ளது.

இந்த ஒற்றுமைப் பயணம் வரும் 30 தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14 ஆம் தேதி திருச்செந்தூரில் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். கடலூரில் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பைஅண்ணாமலை வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 14 ஆம் தேதி நடைப்பயணத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் மேற்கொள்ளவுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

congress Annamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe