Advertisment

“கட்சி தேர்தல் முறைப்படி நடந்தால் கனிமொழிதான் தலைவர்” - அண்ணாமலை

Annamalai said that Kanimozhi will be the leader of DMK if he loses the election

திமுகவில் முறைப்படி நடந்தால் கனிமொழிதான் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisment

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பாஜகவைப் பொறுத்தவரையில் இது அவர்களுக்கு வாழ்வா? சாவா? தேர்தல். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க எதையும் செய்வார்கள். தமிழ்நாட்டில் அவர்கள் எடுக்கின்ற முயற்சிகள் எல்லாம் தோல்லி அடைந்திருக்கின்றன. அதனால் கோபம் அதிகமாகும். நம்மை நோக்கிப் பாய்வார்கள். கடந்த காலங்களில் இதுபோன்று பல தடைகளை உடைத்துதான் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. இந்த முறையும் நாம் அப்படி வெற்றி பெற திமுகவினர் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து ஒற்றைச் சிந்தனையுடன் செயல்பட வேண்டும்” என அறிவுரை வழங்கியிருந்தார்.

Advertisment

இந்த நிலையில் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வரும் அண்ணாமலைமதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “வாழ்வா? சாவா? தேர்தல் எங்களுக்கு இல்லை; திமுகவுக்குத்தான். முதல்வர் ஸ்டாலின் வரும் தேர்தலில் தோற்றார் என்றால் திமுக தலைமையில் மாற்றம் வரும். கட்சி தேர்தல் முறைப்படி நடந்தால் திமுகவின் தலைவராகக் கனிமொழி அக்காதான் வெற்றி பெறுவார்கள். இதை நான் சொல்லவில்லை, பாதயாத்திரையின் போது நான் சந்திக்கும் திமுகவினர் கூட கனிமொழிதான் தலைவராக வர வேண்டும் என்று சொல்கிறார்கள்” என்றார்.

Annamalai kanimozhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe