ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க செயலாளரும்அமைச்சருமான தா.மோ. அன்பரசன் தலைமை வகித்தார். ஆலந்தூர் மண்டலக்குழுத்தலைவர்மற்றும் வடக்குப் பகுதி தி.மு.க செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதைத்தொடர்ந்து, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக தி.மு.க சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ எம்.பி., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில்பேசிய ஆர்.எஸ். பாரதி, “மூன்று மாநில சட்டமன்றத்தேர்தலிலும் பா.ஜ.க படுதோல்வி அடைந்ததால் வருகிற டிசம்பர் மாதத்திலேயே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தத்திட்டமிட்டு உள்ளதாகத்தகவல்கள் வருகின்றன.
தி.மு.க. தலைவரும் நாடாளுமன்றத் தேர்தல் களத்திற்குத்தயாராக இருக்கிறார். அதே போல் நாங்களும் தயாராக இருக்கிறோம். அண்ணாமலைநடைப்பயணம் செல்லும் இடங்களில் எல்லாம் நமது முகவர்கள் பின் தொடர்ந்து சென்று பொதுமக்களிடம் தி.மு.க செய்த சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்” என்று கூறினார்.