Advertisment

“எ.வ.வேலு சொல்வதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்” - அண்ணாமலை

Annamalai regarding DMK ministers pressmeet

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி மதுரையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அண்மையில் நடைபெற்ற திறந்தவெளி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அதில் அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது தொகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக மூன்று கோயில்களை இடிக்க நேர்ந்ததையும், சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்ட அந்தக்கோயில்களுக்குப் பதிலாக இடிக்கப்பட்டதைவிடப் பெரிய அளவில் மூன்று கோயில்களை மீண்டும் கட்டிக்கொடுத்ததையும்சுட்டிக்காட்டிப் பேசினார். இது தொடர்பாகடி.ஆர்.பாலு பேசியதை காணொலியாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் டி.ஆர்.பாலு பேசியதில் சிலவற்றை வெட்டிவிட்டதாக திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், பாஜக மகளிர் அணியின் தேசிய தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வான வானதி சீனிவாசன் மேற்கொள்ள உள்ள பாதயாத்திரையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “நேற்று டி.ஆர்.பாலு பேசிய காணொலியை பாஜக வெளியிட்டது. அதற்கு திமுகவின் செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் சில கருத்துகளைத்தெரிவித்ததாக ஊடக நண்பர்கள் சொன்னார்கள். டி.கே.எஸ். இளங்கோவன் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். அந்த வீடியோவில் எங்கும் கட் செய்யவில்லை;எடிட் செய்யவில்லை. அந்த வீடியோ அப்படியே இருந்தது. அதில் நான் சொல்லியது,கோவிலை இடித்ததை பெருமையாக டி.ஆர்.பாலு பேசினார் என்று. அந்த வீடியோவின் இறுதியில் கோவிலைக் கட்டிக்கொடுத்ததாகவும் சொல்லியுள்ளார். கோவிலைக் கட்டிக்கொடுத்தது முக்கியம் கிடையாது. ஒரு எம்.பி கோவிலை இடிப்பதை பெருமையாக பேசுவதை தமிழக மக்கள் பார்த்தார்கள்.

Advertisment

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக வேலை செய்யச் சென்ற அமைச்சர்கள் பேசியதையும் பார்த்தோம். அமைச்சர் எ.வ.வேலு நாங்கள் ஏதோ மார்பிங் செய்து போட்டுள்ளதாகச் சொல்லியுள்ளார். நான் அவருக்கு சவால் விடுகிறேன். ஒரிஜினல் காணொலியை எ.வ.வேலு எங்கு சொல்கிறாரோ அங்கு கொடுக்கிறோம். தமிழக காவல்துறைக்கே அதைக் கொடுக்கிறோம். முதல்வர் அந்த வீடியோவினை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு பாஜக தயாராக இருக்கிறது. அதில், ஒரு அமைச்சர் 31 ஆம் தேதிக்குள் பணம் கொடுக்க வேண்டும் என்றும், யாரால் பணம் கொடுக்க முடியும்; யாரால் கொடுக்க முடியாது எனவும்பேசுகிறார். நாளை காலை பாஜக தலைவர்கள் தேர்தல் ஆணையத்திடம் இந்த வீடியோவினை கொடுக்க இருக்கிறார்கள். அதை தேர்தல் ஆணையம் பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்கலாம். எ.வ.வேலு சொல்வது போல் அதை நான் எடிட் செய்துள்ளேன் என்பதை நிரூபித்தார் என்றால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்” எனக் கூறினார்.

Annamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe