Advertisment

“அது என்னோட பர்ஸ்னல் மேட்டர்... இத அப்படியே விட்ருங்க...” - நைசாக நழுவிய அண்ணாமலை

annamalai rafale watch controversy

“அது என்னோட பர்ஸ்னல் மேட்டர்.. இத அப்படியே விட்ருங்க..” என, செய்தியாளர் கேட்ட கேள்விக்குநைசாக பதிலளிக்கும் அண்ணாமலையை, நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

Advertisment

தமிழக பாஜக கட்சியில் நடக்கும் பல்வேறு சர்ச்சைகளால்அரசியல் களம் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. பாலியல் சர்ச்சைகள் முதல் உட்கட்சி பூசல் வரை எனவெளியே வரும் ஏகப்பட்ட புகார்களால்கமலாலயம் கதிகலங்கியுள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு சர்ச்சையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிக்கியுள்ளார்.

Advertisment

அண்ணாமலை தன்கையில் கட்டியிருக்கும்வாட்சியின் விலை மட்டுமே சுமார் 4 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. தற்போது இதுதான் அண்ணாமலையின் வாட்ச் சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது.போலீஸ் வேலையை ராஜினாமா செய்த அண்ணாமலை, திடீரென அரசியலில் குதித்தார். ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அண்ணாமலை, வாட்ச் மட்டும் 4 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். வாட்ச் வாங்கவே இவ்வளவு பணம் இருக்கிறது என்றால், அண்ணாமலையிடம் எவ்வளவு பணம் இருக்கும் என சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

இது குறித்து அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் கேள்விகேட்டபோது "என்னுடைய கையில் கட்டியிருக்கும் வாட்சியின் விலை சுமார் 3.5 லட்ச ரூபாய். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களை வைத்து செய்யப்பட்ட சிறப்பு வாட்ச் இது. ரஃபேல் விமானத்தைத்தயாரித்த அதே நிறுவனம்தான் மொத்தம் 500 வாட்ச்களை தயாரித்தது. எனக்கு ரஃபேல் விமானத்தை ஓட்டக் கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தான் இந்த வாட்சியினைக் கட்டி இருக்கிறேன்" என அண்ணாமலை பேசியிருந்தார்.

மேலும், அவர் கூறும்போது "இது என்னோட பர்ஸ்னல் மேட்டர். இத அப்படியே விட்ருங்க" என செய்தியாளரின் கேள்விக்கு நைசாக பதிலளித்தார். ஆனால், இதைப்பார்த்த நெட்டிசன்கள், அண்ணாமலை கையில் இருக்கும் கைக்கடிகாரம், சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்படுகிறது என்ற மற்றொரு தகவலையும் வெளியிட்டு வருகின்றனர். தற்போது, அண்ணாமலையின் வாட்ச் சர்ச்சை குறித்த தகவல், சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

Annamalai watch
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe